குரூப்-2 முதன்மை தேர்வு எளிதாக இருந்தது – தேர்வர்கள் கருத்து

சென்னை, பிப்ரவரி 24:
குரூப்-2 முதன்மை தேர்வு எளிதாக இருந்தது – தேர்வர்கள் கருத்து
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-2 மற்றும் 2A பணிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வு 2024 செப்டம்பர் 14 அன்று நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, குரூப்-2 முதன்மை தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு பிப்ரவரி 8 அன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில், உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட 534 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நேற்று (பிப்ரவரி 24) நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 41 தேர்வு மையங்களில், 7,000க்கும் அதிகமான தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். காலை 9.30 மணி முதல் 12 மணி வரை நடைபெற்ற இந்த தேர்வுக்கு, தேர்வர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்பு சோதனையிற்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
டிஜிட்டல் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.