புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – வரும் 21-ந் தேதி நடைபெறும்

புதுக்கோட்டை, பிப்ரவரி 18 –
புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – வரும் 21-ந் தேதி நடைபெறும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் துறைகளில் வேலை தேடும் இளைஞர்களுக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தலைமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் வருகிற 21-ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் தகவலின்படி, இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன.
வேலை தேடும் இளைஞர்கள் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித் தகுதிகள் பெற்றவர்களாக இருக்கலாம்.
மேலும், 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
மேலும், வேலை தேடும் இளைஞர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
இந்த முகாமில் அதிகமானோர் கலந்து கொண்டு வாய்ப்புகளைப் பெற மாவட்ட கலெக்டர் அருணா கேட்டுக்கொண்டுள்ளார்.