புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு: புதிய எஸ்.பி. அபிஷேக் குப்தா நியமனம்
புதுக்கோட்டை, டிச.30-
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு: புதிய எஸ்.பி. அபிஷேக் குப்தா நியமனம்
பதவி உயர்வு
தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 13 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சூப்பிரண்டு
அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1
One Comment