வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தேர்வர்கள் பதிவு செய்யலாம்
புதுக்கோட்டை, டிச.24-
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தேர்வர்கள் பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2024-ம் ஆண்டிற்கான தொகுதி குரூப்-2, குரூப்-2 ஏ போட்டித் தேர்வில் முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த 12-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி தொகுதி குரூப்-2, குரூப்-2 ஏ தேர்விற்கான முதன்மைத்தேர்வுக்கு, கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களை கொண்டு அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், நுழைவுச்சீட்டு நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்துக்கொள்ளலாம்.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பாடக்குறிப்புகள் மற்றும் இணையவழி மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.