உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆவுடையார்கோவிலில் இன்று கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை, டிச.18-
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆவுடையார்கோவிலில் இன்று கலெக்டர் ஆய்வு
ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடத்தப்படவுள்ளது.
கலந்தாய்வு கூட்டத்தின்போதும், குறுவட்டந்தோறும் காலை 9 மணி முதல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ள பட்டா மாறுதல் முகாமிலும் அளித்து பயனடையுமாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1