புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல தடை
அறந்தாங்கி டிசம்பர் 18
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல தடை .
புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கோபாலப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய கடலோர பகுதி நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் 18.12.24 புதன்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது.
படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி வைக்கவும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும் புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1