புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்விவசாயிகள் கோரிக்கை
புதுக்கோட்டை, டிச.16-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்விவசாயிகள் கோரிக்கை கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இருந்து தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் சம்பா நெல் சாகுபடிக்காக பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. இந்த நிலையில் மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்லணை கால்வாய் பாசனத்தார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்குமடை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்டத்தில் மழை நீர் விவசாய நிலங்களில் தேங்கியதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடைமடை பகுதியான நாகுடி, கூகனூர், மன்னகுடி, புறங்காடு, கழுகுமனை, ஏகணிவயல், கண்டிச்சங்காடு, ஏக்பெருமகளூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வயல்களில் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.