மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளமாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகளின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.
மணமேல்குடி, டி.ச -5
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் அவர்கள் இப்போட்டியினை தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார்.
நடுவர்களாக முதுகலை ஆசிரியர் வெற்றிச்செல்வன்,நளினி,பட்டதாரி ஆசிரியர்கள் இளங்கோவடிவேல் ஜோக்கின்ராய் ஆசிரியர் பயிற்றுநர் சசிகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.
இந்நிகழ்வில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகளின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் 7 மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.