மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்,கலெக்டர் அருணா வழங்கினார்.
புதுக்கோட்டை, டிச.4-
புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி பேசினார்.
மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் உதவி உபகரணங்கள், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் என மொத்தம் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 91 ஆயிரத்து 600 மதிப்புடைய பல்வேறு உதவி உபகரணங்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்து வரும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளையும், சிறப்பு பள்ளிகளில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், முத்துராஜா எம்.எல்.ஏ., புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கலைவாணி, இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், முதல்- அமைச்சர் மருத்துவ காப்பீடுத் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ரவிசங்கர், தாசில்தார் பரணி, முடநீக்கியியல் வல்லு னர் ஜெகன் முருகன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.