புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு

புதுக்கோட்டை,. ந.வ 29

தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நாளை கரையை கடக்கிறது வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது. இருப்பினும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலாக மாறாது

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசும் தீவிரப்படுத்தியது.

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா?

மாறாதா? என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும், இன்று (வெள்ளிக்கி ழமை) காலை வரை மட்டுமே தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை அறிவித்தது.

நாளை கரையை கடக்கும்

மேலும் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைக்குள் படிப்படி யாக வலு இழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அது நாளை (சனிக்கிழமை) மாமல்லபு ரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக் கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு காரணமாக, இன்று முதல் (வெள்ளிக்கி ழமை), வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தமிழ் நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.

இதில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், மயிலா டுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழை வரையிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண் ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக் கிறது.

அதி கனமழைக்கும் வாய்ப்பு

நாளை (சனிக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபு ரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரிய லூர்,தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டி னம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப் பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், அதற்கு அடுத்தநாள் (திங்கட் கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேற்சொன்ன பகுதிகளில் அதி கனமழை வரை பெய்யக் கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மிக கன மழை வரை பெய்யக்கூடிய இடங்களுக்கு ஆரஞ்சு எச்ச ரிக்கையும், கனமழை வரை பதிவாகும் பகுதிகளுக்கு மஞ் சள் எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக விடுத்துள்ளது.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

புயலோ, புயல் சின்னமோ அல்லது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமோ எதுவாக இருந்து தமிழக பகுதிகளை நோக்கி நகர்ந்து, கரையை கடந்தாலும் மழை நிச்சயம் இருக்கும் என்றும், அதிலும் குறிப்பாக சென்னை முதல் கடலூர் இடைப்பட்ட வட மாவட்ட பகுதிகளில் மழைக் கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றும், அந்த பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தனி யார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச் சந்தர் தெரிவித்தார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button