இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி

கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் ஏற்பு

புதுக்கோட்டை, நவ.27-

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் அருணா தலைமையில் அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றனர். “இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட் டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச் சார்பின்மையும் மக்களாட்சிமுறையும் அமைந்ததொரு குடி யரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமு தாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு. சமயநம்பிக்கை, வழிபாடு இவற் றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற் றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர் கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்ப டுத்தும் உடன்பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசியலமைப்புப் பேரவை யில், 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாளில், ஈங்கித னால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்” என்ற உறுதிமொழியினை கலெக்டர் அருணா வாசிக்க அதனை பின்தொடர்ந்து, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண் டனர். இந்நிகழ்வில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப் தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன் உள் பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல அரசு போக்குவரத்து கழகம் புதுக்கோட்டை மண்டலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமேலாளர் முக மது நாசர் தலைமையில் அதிகாரிகள், அலுலர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button