டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண் பலி
காயமடைந்த 40 பெண்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அதிராம்பட்டினம், நவ.26-
மணமேல்குடியில் நடவு பணி முடிந்து திரும்பியபோது அதிராம்பட்டினம் அருகே டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண் பலியானார். மேலும் காயம் அடைந்த 40 பெண்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
நடவு செய்யும் பணி:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் வயலில் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக திரு வாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு பட்டவேளி பகுதியை சேர்ந்த மல்லிகா (வயது50), முத்துக் கண்ணு (37), ரோஜினி மேரி(35), மலர்(59), ஜெயம்(65). சுதா (38), வனரோஜா(50), சாந்தி(35), புவனேஸ்வரி(50), ஜெயலட்சுமி(45), சிவபாக்கியம்(40), கனகவல்லி(60), எழி லரசி(45), தீபா(28), வசந்தா(65), நாகவல்லி(45), மைதிலி(40), ராமு(43), சுமதி(42), காசியம்மாள்(60) உள் பட 42 பெண்கள் சென்றனர். நேற்று வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்புவதற்காக சரக்கு ஏற் றும்(டெம்போ) வாகனத்தில் 42 பெண் தொழிலாளர்களும் ஏறினர். அந்த வாகனம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற் கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தது.
சரக்கு வாகனம் கவிழ்ந்தது:
வாகனத்தை புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி புது மனை தெருவை சேர்ந்த ராஜா முகமதுவின் மகன் அமீர் கான் ஓட்டி வந்தார்.
அதிராம்பட்டினம் அருகே கருங்குளம் பாலத்தில் இருந்து கரிசக்காடு செல்லும் பகுதியில் சென்றபோது திடீரென வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்தது.
பெண் பலி:
இந்த விபத்தில் திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு பட்டவேளி பகுதியை சேர்ந்த துர்க்கை அம் மாள்(55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் அந்த வாகனத்தில் பயணம் செய்த 41 பெண் களும் காயம் அடைந்தனர். அதில் 6 பேர் லேசான காயத்துடன் அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 35 பேர் பட் டுக்கோட்டை அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்றனர். அதில் 25 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண் பலி யான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியது.