புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்களில் அதிகாரி ஆய்வு.
மணமேல்குடி, மார்ச்.24-
புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையங்களில் எழுத்தறிவு மதிப்பீடு நடைபெற்றது. அதன்படி மணமேல்குடி ஒன்றியத்தில் 30 கற்றல் மையங்களில் 600 கற்போருக்கு மதிப்பீடு நடைபெற்றது. மதிப்பீட்டில் தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளராகவும், தன்னார்வலர்கள் அறை கண்காணிப்பாளராகவும் செயல்பட்டனர். தேர்வானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கற்போர் வசதிக்கேற்ப மையங்களிலும், இல்லங்களிலும் நேரடியாக மதிப்பீடு நடைபெற்றது.
இதையடுத்து, மேலஸ்தானம், மும்பாலை பட்டினம், பட்டங்காடு, கீழ மாந்தங்குடி, இடையாத்திமங்கலம் ஆகிய 5 கற்றல் மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ராஜேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன், இந்திராணி, மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் ஆகியோர் உடன் இருந்தனர்.