கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தின் “கடிதம்” சம்பந்தப்பட்ட விதிமுறைகள் வெளியீடு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம், ஊர் பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் சம்பந்தமாக ஜமாத் நிர்வாகத்திடம் “கடிதம்” வழங்கும் விஷயம் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பை “GPM முஸ்லிம் ஜமாஅத் 2024” என்ற வாட்ஸ்அப் குழுவில் வெளியிட்டுள்ளது.
ஜமாத் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:-
கோபாலப்பட்டினம் முஸ்லீம் ஜமாஅத்தை சேர்ந்த நமது ஊர் பொதுமக்கள் தங்களின் சொந்த பிரச்சினையின் காரணமாக நமது ஊர் ஜமாஅத் நிர்வாகிகளிடம் கடிதம் கொடுத்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்பது என்பது நமது ஊர் மரபு ஆகும். இதை நமது ஊர் பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே.
அவ்வாறு கொடுக்கப்படும் கடிதங்கள் சம்மந்தமான விதிமுறைகள்:
1)மனுதாரரின் தொடர்பு எண், முகவரி உட்பட முழு விபரம் தெளிவாக இருக்க வேண்டும்.
2)எதிர்மனுதாரரின் தொடர்பு எண், முகவரி உட்பட முழு விபரம் தெளிவாக இருக்க வேண்டும்.
3)வெளியூர் ஜமாஅத் சம்பந்தமான கடிதமாக இருந்தால் அந்த ஜமாஅத்தின் தற்போதைய நிர்வாகிகளின் தொடர்பு எண்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
4)தனிப்பட்ட பிரச்சினையில் புகாருக்கு நேரடியாக சம்பந்தபட்டவர்கள் மட்டுமே கடிதத்தின் மனுதாரராக இருக்க வேண்டும்.
5)கடிதத்தின் மனுதாரரின் சந்தா தொகை நிலுவையில் இருக்கக்கூடாது. சந்தா முழுமையாக கட்டியிருக்க வேண்டும்.
6)மேற்படி அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் கடிதத்திற்கான நுழைவுக்கட்டணம் ரூ. 100/ (நூரு ருபாய்) பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதும் கொடுக்கப்படும். பிறகு விரைவில் விசாரனை தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.