கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் செப்.19 மின்தடை அறிவிப்பு!
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 19-09-2024 வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதையொட்டி கொடிக்குளம், அமரடக்கி, ஆவுடையார்கோவில் மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு வருகிற 19-09-2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் மீமிசல், கோபாலப்பட்டினம், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், கொடிக்குளம், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், அம்பலவானேந்தல், ஆவுடையார்கோவில், ஏம்பல், பாண்டிபத்திரம், கரூர், திருப்புனவாசல், அமரடக்கி, சுப்ரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 19-09-2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்
குறிப்பு
அறந்தாங்கி, கீரமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை துணை மின் நிலையங்களில் மின்நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. எனவே இந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்கும். வேறொரு நாளில் மின்நிறுத்தம் செய்யப்படலாம்.