ஆகஸ்ட் 20-ந் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர்கள் சரிபாா்ப்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

அக்.29 முதல் நவ.28 வரை வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆகஸ்ட் 20-ந் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர்கள் சரிபாா்ப்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

வாக்காளா் பட்டியல் திருத்தப்பணிக்கான  அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அக்.29-ந் தேதி முதல் நவ.28-ந் தேதி வரை நடைபெறவுள்ளன.

வாக்காளா்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணியை வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆக.20-ந் தேதி முதல் அக்.18-ந் தேதி வரை மேற்கொள்கின்றனா்.

அதைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அக்டோபா் 19-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளன.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்கும் நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக அக்.29-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

மேலும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button