மீமிசலில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மீமிசலில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பேருந்து நிலையம் அருகில் மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலர் பரணி, ஆவுடையார்கோவில் தாசில்தார் பாலகிருஷ்ணன், அறந்தாங்கி தனி தாசில்தார் (ச.பா.தி) ஜபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மதுவினால் ஏற்படும் தீமைகள், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து இதில் கலந்து கொண்ட அனைவரும் போதைப் பொருள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும், போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது என்பதையும், பிறர் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தும் வகையில் விளம்பர பதாகைகள், ஒலி பெருக்கிகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஆவுடையார்கோவில் தாலுகா வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.





