சர்வதேச யோகா தின நிகழ்ச்சி.

புதுக்கோட்டை, ஜூன்.22-

புதுக்கோட்டையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் நேற்று காலை பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் யோகா மாஸ்டர் வழிகாட்டலில் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.
இதேபோல் கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்ராதேவி உள்பட நீதிபதிகள், வக்கீல்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை கலைஞர் பூங்காவில் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர்.

அரசு பள்ளி

விராலிமலை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்குடி அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு யோகாசனம் செய்து காண்பித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தநிகழ்வில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் முருகன் கோவில் திடலில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
வேளாண்மை கல்லூரி
அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரசு வேளாண்மை கல்லூரி முதல்வர் நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் சரவணன், யோகா பயிற்சியாளர் இமயராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு யோகாசனம் குறித்து சிறப்புரை ஆற்றினர். பின்னர் பத்மாசனம், கோமுகாசனம், வஜ்ராசனம், புஜங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களும் அவற்றின் பயன்கள் குறித்தும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் யோகாசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் விஜயகுமார், வேங்கடலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
இதேபோன்று அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் தலைமையிலும், பரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு சித்த மருத்துவர் சுயமரியாதை தலைமையிலும் யோகா நிகழ்ச்சிகள் நடந்தது.
ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆங்கில துறை தலைவர் கணேசன், வணிகவியல் துறை தலைவர் சீனிவாசன், கணிதவியல் துறை தலைவர் கிளாடிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக யோகா ஆசிரியர் அஜய்குமார்கோஷ் கலந்து கொண்டு யோகாசனங்களை மாணவர்களிடையே செய்து காட்டி விளக்கம் அளித்தார்.

ஆலங்குடி

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. ஓய்வு பெற்ற அரசு டாக்டர் முத்தையா யோகா தினம் குறித்து பேசினார். இதையடுத்து, பத்மாசனம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஆசனங்கள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கினார். டாக்டர் லதா முன்னிலை வகித்தார். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு யோகா செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் டாக்டர்கள் பாரதி கண்ணம்மா, பிரதிபா மற்றும் செவிலியர்கள் வேலுமணி, செல்வகுமாரி, விண்ணரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக யோகா மருத்துவர் கீதா வரவேற்றார். முடிவில் சித்த மருத்துவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button