புதுக்கோட்டையில் பரவலாக மழை.

புதுக்கோட்டை, ஜூன்.2-

திடீர் மழை

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் வெயில் சுட்டெரித்தது. அக்னிநட்சத்திர காலத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. இடையில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. அக்னிநட்சத்திரம் கடந்த 28-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் அக்னிநட்சத்திரம் முடிந்த பின்பும் கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை.

புதுக்கோட்டையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மாலை 4 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்தன. தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை பரவலாக பெய்தது. மேலும் இடி, மின்னல், காற்றும் காணப்பட்டது. இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. வெயில் தாக்கத்தால் அவதி அடைந்து வந்த மக்களுக்கு இந்த திடீர் மழை சற்று ஆறுதலை கொடுத்தது.

மரங்கள் சாய்ந்தன

திருவரங்குளத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் சூறைக்காற்றுடன் கூடிய கோடை மழை பெய்தது. கே.வி.எஸ்.நகர், கிட்டக்காடு, தேத்தான்பட்டி, இமனாம்பட்டி, பொற்பனைக்கோட்டை, நிமனேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் ஓடு பெயர்ந்து விழுந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. திருவரங்குளம் மெயின் ரோட்டில் ஒரு வீட்டின் மாமரம் மின்சார ஒயரில் சாய்ந்தது. திருவரங்குளம், கேப்பரை, கைகுறிச்சி, பூவரசகுடி, அழகம்பாள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்து விட்டது. திருவரங்குளத்தில் சாலையோரங்களில் உள்ள மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

கீரனூர், காரையூர், ஆவூர்

காரையூர் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னல் சூறைக்காற்றுடன் ½ மணி நேரம் மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட விளாப்பட்டி, வெம்மணி, நாங்குப்பட்டி, நீர்பழனி, ஆலங்குடி, ஆவூர், விராலிமலை, ராஜகிரி, குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலையோரங்கள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் அதிகளவில் மழை நீர் தேங்கி நின்றது. விராலிமலை-இலுப்பூர் சாலையில் ராஜகிரி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. சாய்ந்து விழுந்த மரத்தின் கிளைகள் மின் கம்பியில் விழுந்ததால் மின்கம்பி அறுந்து விழுந்தது.

அன்னவாசல், ஆதனக்கோட்டை

இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டி, ஆதனக்கோட்டை, சொக்கநாதப்பட்டி, மோளுடையான்பட்டி, கருப்படிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button