குவைத்தில் கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; வெளியுறவு துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் கடிதம்.

சென்னை, மே.22-

குவைத்தில் கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்ய தூதரக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வெளியுறவு துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியிருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:-

பிரதமர் மோடிக்கு கடிதம்

குவைத்தில் கைதான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 5-12-2023 அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு 9-2-2024 அன்று கடிதம் எழுதியிருந்தார்.

தூதரக நடவடிக்கை

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அண்டை நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்திட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதால், அவர்களை விடுதலை செய்திட உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசின் வெளியுறவு துறை செயலாளருக்கு மீண்டும் நினைவூட்டி கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button