12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு.
விமானப் போக்குவரத்து அமைப்பான, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமானத்தில் குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவராவது அருகில் இருக்குமாறு இருக்கை ஒதுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களையும் ஏவியேஷன் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுபற்றி வெளியான அறிவிப்பில்,”12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரே PNR இல் பயணம் செய்யும் பெற்றோர்/பாதுகாவலர்களில் ஒருவரிடமாவது இருக்கைகள் ஒதுக்கப்படுவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும், மேலும் அதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்” என்று DGCA இன் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வெப் செக்-இன் செய்யாமல், நேரடியாக விமான நிலையத்தில் செக்-இன் செய்யும் பயணிகளுக்கு இந்த விதிமுறை கட்டாயம் கடைபிடிக்கப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.