GPM தலைமுறை மீடியா சார்பாக இரத்ததானம் வழங்குவோர் விபரங்கள் சேகரிப்பு.
அன்பார்ந்த GPM தலைமுறை மீடியா சொந்தங்களே, உறவுகளே!. அவசரகால மருத்துவ சிகிச்சையின் பொழுது பல்வேறு நபர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டு அதற்காக அங்கும் இங்கும் அலைய வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் நோயாளிக்கு உரிய நேரத்தில் இரத்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இரத்தம் கிடைக்காததால் சிகிச்சைகளை தாமதப்படுத்த வேண்டிய சூழல்களும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக இரத்தம் தேவைப்படுபவரின் நலன் கருதி இரத்ததானம் வழங்குபவர்களின் விபரங்கள் GPM தலைமுறை மீடியா சார்பாக சேகரிக்கப்பட்டு அவசர காலத்திற்கு இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தம் வழங்க உதவியாக அமையும். எனவே இரத்ததானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் தாங்கள் தங்களுடைய விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள “கூகுள் ஃபார்மில்” எழுதி அனுப்புமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் வழங்கக்கூடிய தகவல்கள் அனைத்தும் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
“ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!”- (அல்குர்ஆன்- 5:32).
“உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!!”
இரத்த தானத்தின் நன்மைகள்
•நன்கொடையாளரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
இரத்த தானம் செய்வதில் பலர் பயப்படுகிறார்கள். ரத்த தானம் செய்தால் பலவீனமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். மாறாக, இரத்த தானம் நன்கொடையாளருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், நன்கொடையாளரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
•இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
நீங்கள் இரத்த தானம் செய்யும்போது உங்கள் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக, இரத்த தானம் இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்தின் அளவைக் குறைக்க உதவுவதால் ஆண்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும். (ஆண்களுக்கு மட்டும் ஏன் என்று நீங்கள் யோசித்தால், மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் இரத்தத்தை இழப்பதால் தான்). இரும்புச் சத்து அதிகரிப்பது பல இதய நோய்களுக்கு வழிவகுக்கும், ஆனால் இரத்த தானம் செய்வதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை முறையே 88% மற்றும் 33% வரை குறைக்கலாம்.
•புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:
மில்லர்-கீஸ்டோன் இரத்த மையத்தின்படி, சீரான இரத்த தானம் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
•நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது:
இரத்த தானம் செய்த பிறகு உங்கள் மண்ணீரல் புத்துயிர் பெறுவதால், இரத்த தானம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
விபரங்கள் அனுப்ப:
கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்தால் கூகுள் ஃபார்ம் வரும், அதில் கேட்கப்பட்ட விபரங்களை முழுமை செய்து இறுதியாக “SUBMIT” கொடுத்தால் போதும்.
https://forms.gle/pC4po4uReNJTvtDu5
கொடையாளிகளின் தகவல் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
தகவலை எவ்வாறு அனுப்புவது: