மீமிசல் அருகே சேமன்கோட்டை, கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகன விபத்து.
மீமிசல்,மே.03-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள சேமன்கோட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று 03.05.24 காலை 6 மணி அளவில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த காரும் மீமிசலில் இருந்து தண்ணீர் ஏற்றிக் கொண்டு சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்ப்பட்டது.
கேரளாவில் இருந்து வந்த காரில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பயணித்தனர், தண்ணீர் ஏற்றி சென்ற வாகனத்தில் ஓட்டுநர் மட்டும் சென்றுள்ளார். சேமன் கோட்டை பாலம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனங்கள் எதிர் எதிரே வந்து கொண்டிருந்தன. அப்பொழுது எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்ப்பட்டதில் காரில் பயணித்த சிறுமிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது, தண்ணீர் வாகன ஓட்டுநர் உட்பட மற்ற அனைவருக்கும் உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி விஜய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருங்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.