கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை நடத்தும் “மழை வேண்டி சிறப்பு தொழுகை”.
மீமிசல்,மே.02-
கடற்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் 04.05.24 சனிக்கிழமை மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் “மழை வேண்டி சிறப்பு தொழுகை” நடைபெறுகிறது.
இதுதொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:-
மழை வேண்டி தொழுகை
அல்லாஹ்வின் நல்லடியார்களே! சங்கைமிக்க உலமா பெருமக்களே, கண்ணியமிக்க ஜமாத்தார்களே.
புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக போதிய மழை இல்லாத காரணத்தினால் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. மழை இல்லாமல் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர், நீர் நிலைகள் வறண்டு போய் உள்ளன, பல கிராமங்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்க்க முடியாத நிலையில் உள்ளனர்.
இன்று பரவலாக எல்லா இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இந்த சூழ்நிலையில் மழை இறைவனிடத்தில் கேட்டுப் பெற என்ன வழிமுறைகளை குர்ஆனும் ஹதீஸும் சொல்லித் தருகிறதோ அதை இன்ஷா அல்லாஹ் நாம் பின்பற்றி அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கோரி மழைக்காக வேண்டி நாம் அனைவரும் தொழுது துஆ செய்வோம்.
நாள்: 04-05-2024 சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு.
இடம்: பாப்புலர் பள்ளி வளாகம், மீமிசல்.
இப்படிக்கு,
செயலாளர், ஜமாஅத்துல் உலமா சபை கடற்கரை வட்டாரம்.
அலுவலகம்:-
மஸ்ஜிதுர் ரிழ்வான், 1451A, உசிலங்காடு ஆர்ச் அருகில் EC.ரோடு அம்மாபட்டினம் 614 617.