10,11,12 ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி.
10,11,12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து வாங்கிக் கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டது. மதிப்பெண் பட்டியலில் பிழை இருந்தால் இயக்குநரகத்துக்கு தெரிவிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அசல் மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வு துறை தெரிவித்துள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அந்த அந்த பள்ளிகளில் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதேபோன்று ஆன்லைன் மூலம் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் அளித்து மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வைத்து கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பித்த தேர்வு மையங்களில் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.
தற்காலிக மதிப்பெண் பதிவிறக்கம் செய்ய