வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு: மருத்துவமனையில் இருந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயூன் கபீர்.
தஞ்சாவூர், மார்ச்.27-
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோபாலப்பட்டினம் மண்ணின் மைந்தன் கும்பகோணம் அன்னை கல்லூரியின் முதல்வர் ஹிமாயூன் கபீர் போட்டியிடுகிறார். இவருக்கு வைரஸ் காய்ச்சல் வந்ததால் கடந்த 2 நாட்களாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்றைய தினம் நிறையபேர் வந்து வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்பதால் நேற்று (செவ்வாய் கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய ஹிமாயூன் கபீர் முடிவு செய்தார்.
இதனால் அவர் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்ட பிளாஸ்திரி பேண்டை (வென்பிளான்) அகற்றாமல் மருத்துவமனையில் இருந்து நேராக தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயூன் கபீர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். பின்னர் 5 நபர்களுடன் சென்று கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் மீண்டும் அவர், தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.