வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? என பரவும் வதந்தி செய்தி.
வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படலாம் எனத் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
2 மாதத்திற்கு ஒருமுறை வீடுகளில் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போது 100 யூனிட்க்குள் வரும் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. எஞ்சிய பயன்பாட்டுக்கே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிலர் முறைகேடு செய்வதால் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் 100 யூனிட் இலவசத்தை ரத்து செய்ய மின்வாரியம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
உண்மை என்ன:-
வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற செய்தி உண்மையில்லை.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு மாறான செய்தியை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில்:-
வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இந்த உண்மைக்கு மாறான செய்திகளை நம்ப வேண்டாம்! எங்களின் அதிகாரப்பூர்வத் தளங்களை பார்க்கவும்.! என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.