விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையில் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்

மணமேல்குடி, அக். 22 –

விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையில் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்

விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையில் முறைகேடு செய்ததில் இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் மதன் (வயது 32).

கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ.5.89 லட்சத்தை, பயனாளிகளின் கணக்கில் செலுத்தாமல், தனக்கான கணக்கில் சேர்த்ததாக வருவாய் மற்றும் செலவுக் கணக்குத் தணிக்கையில் கண்டறியப்பட்டது.

இந்த முறைகேட்டினால், மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா, மதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், மதன் மீது வழக்குப் பதிந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button