விசைப்படகுகளில் ‘டிரான்ஸ்பாண்டர்’ கருவி பொருத்தம்; மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதை தடுக்க உதவும்.

புதுக்கோட்டை, அக் 26

விசைப்படகுகளில் 'டிரான்ஸ்பாண்டர்' கருவி பொருத்தம்; மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதை தடுக்க உதவும்.

விசைப்படகுகளில் ‘டிரான்ஸ்பாண்டர்’ கருவி பொருத்தம், மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதை தடுக்க உதவும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகுகளில் ‘டிரான்ஸ்பாண்டர்’ கருவி பொருத்தப்படுகிறது. இது மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதை தடுக்க உதவும்.

விசைப்படகுகள்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தளங்களில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மீனவர்கள் இராமேசுவரம் அருகே இலங்கை கடல் பகுதி எல்லையை ஒட்டி மீன்பிடிக்க செல்லும் போது சில நேரங்களில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது.

விசைப்படகுகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் சில நேரங்களில் அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மீனவர்களுக்கு இதுபோன்ற நிலை பல நேரங்களில் ஏற்படுகிறது. இதனால் மீனவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

‘டிரான்ஸ்பாண்டர்’ கருவி

இந்த நிலையில் கடலில் மீனவர்கள் எல்லையை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ‘டிரான்ஸ்பாண்டர்’ எனும் கருவியை உருவாக்கியுள்ளது. இந்த கருவியை விசைப்படகுகளில் பொருத்தி, ப்ளூடூத் வாயிலாக இக்கருவியை இணைத்து செல்போனில் உள்ள செயலி வழியாக தகவல்களை பெற முடியும்.

இதன் மூலம் கரையில் இருந்தும், கடலில் உள்ள மீனவர்களிடமும் செய்தி பரிமாறிக்கொள்ளலாம். இந்த கருவி மூலம் இந்திய எல்லைக்குள் கடலில் மீன்பிடிக்க உதவுவதோடு, கடலில் படகு செல்லும் பாதையை காட்டுகிறது. எல்லை தாண்டி செல்லும் போது கருவி காட்டிவிடும்.

பொருத்தும் பணி தொடக்கம்

தமிழகத்தில் மீனவர்களின் விசைப்படகுகளில் இந்த கருவி பொருத்தும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்களுக்காக அரசு தரப்பில் இருந்து முதல் கட்டமாக 288 ‘டிரான்ஸ்பாண்டர்’ கருவிகள் வரப்பெற்றுள்ளன. மீனவர்களுக்கு இலவசமாக வழங்கி அதனை தற்போது மீனவர்களின் விசைப்படகுகளில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

புயல், மழை போன்ற காலத்தில் ஆழ்கடலில் விசைப்படகுகள் சிக்கி கொண்டால், கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும், மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப முடியும். மேலும் கரையில் மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, அவசர செய்தியை படகிற்கு அனுப்பவோ முடியும்.

வானிலை நிலவரம்

இதேபோல் அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரம் ஆகியவற்றை படகிற்கு அனுப்ப முடியும். கடலில் ஆபத்து காலங்களில் விசைப்படகுகள் நிற்கும் இடத்தை துல்லியமாக கண்டறிந்து மீட்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். இந்த கருவி மீனவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button