வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை மாவட்டம், வடசென்னைக்குட்டபட்ட பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் திறன்பேசி பெற இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத,காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திறன்பேசி பெற தங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், UDID அட்டை ஆதார் அட்டை மற்றும் இளங்கலை கல்வி/முதுகலைக்கல்வி பயில்பவர்கள். பணிபுரிபவர்கள்/சுயதொழில் புரிபவர்கள் அதற்கான உரிய சான்றுகளுடன் ஒருவார காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவலுக்கு
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/09/2024093061.pdf