வங்கி பெயரில் வாட்ச்ஸப்பில் வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்யாதீர்கள்.
தற்போது ஹேக்கர்கள் வாட்ஸப்பில் உள்ள குழுக்களுக்கும் தனிபட்ட எண்களுக்கும் வங்கி பெயரில் லின்ங் அல்லது ஆப்களை அனுப்புகின்றார்கள்.
அந்த லின்ங்கை அல்லது ஆப்பை கிளிக் செய்யாதீர்கள் ஒருவேளை நீங்கள் அந்த லின்ங்கையோ அல்லது ஆப்பையோ கிளிக் செய்தால் உடனே உங்களுடைய whatsapp ஹேக் செய்யப்பட்டு உங்கள் நம்பரில் இருந்து உங்கள் வாட்ஸ் அப்பில் உள்ள அத்தனை நபர்களுக்கும் நீங்கள் மெசேஜ் அனுப்புவது போன்று தானாகவே அந்த ஆப்புடைய லிங்க் சென்று விடும்.
அதனால் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் எந்த ஒரு லிங்கையும் உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம்.
வாட்ஸ் அப் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
தெரியாத நபர் அல்லது எண்ணிலிருந்து பெறப்படும் இணைப்புகளை (லிங்க்) எந்த சூழ்நிலையிலும் கிளிக் செய்யக் கூடாது.
தெரியாத நம்பரிலிருந்து இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்தால் ரிப்ளை செய்யாதிர்கள்.
பணப் பலன்களைக் கோரும் இணைப்புகள் அல்லது செய்திகளைக் கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய செய்திகள் பெரும்பாலும் மோசடி செய்பவர்களால் தான் அனுப்பப்படுகின்றன.
மேலும் பணப் பலன்களைக் கோரும் அதாவது லோன் தருகிறோம், குறைந்து அளவு பணம் கட்டி அதிக அளவில் லாபம் சம்பாதிக்கலாம் போன்ற இணைப்புகள் அல்லது செய்திகளை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.
பொதுவாக பேங்க் டெலிவரி சேவைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் என்ற பெயரில் தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ்களை அனுப்பினால் எதையும் கிளிக் செய்யாமல் அப்படியே டிலைட் செய்துவிடுங்கள்.
தெரியாத நம்பரிலிருந்து வரும் மெசேஜை கிளிக் செய்ய வேண்டாம். இந்த லிங்களின் உதவியுடன், மேல்வேர் அல்லது வைரஸ்கள் போனில் டவுன்லோட் செய்யப்படுகின்றன.
அதேபோல் வாட்ஸ் அப் வழியாக தெரியாத எண்களில் இருந்து ஏதேனும் அழைப்புகள் வரும் பட்சத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
தெரியாத எண்களில் இருந்து அழைப்புகளை மேற்கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.