வக்ஃப் வாரிய புதிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய அரசு.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்தது மத்திய அரசு.
வக்பு என்றால் என்ன:-
வக்ஃபு (waqf) என்பதன் பொருள் (அறக்கொடையை) நிலைநாட்டுதல் ஆகும். ஒரு சொத்தை வக்ஃபு செய்வதன் மூலம் அந்தச் சொத்தின் உரிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து, அதன் வருமானத்தையும், பலனையும் மக்களின் நலனுக்காக செலவிடுவதே நோக்கமாகும்.
இசுலாமிய சமயம் தொடர்பாக பள்ளிவாசல், கல்வி நிலையம் அல்லது தொண்டு நிறுவனம் அமைக்கும் நோக்கத்திற்காக ஒரு முஸ்லீம் இறைவன் பெயரால் வழங்கிய அறக்கொடை ஆகும்.
ஒருவர் தன்னுடைய சொத்துக்களை வக்ஃபு என்ற அறம் செய்து விட்ட பிறகு அவரோ, அவருடைய வழித்தோன்றல்களோ அந்தச் சொத்துக்களின் நிர்வாகிகளாக இருக்க முடியுமே தவிர, உரிமையாளர்களாக இருக்க முடியாது.
ஆரம்ப கால இந்தியாவில் முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துகளை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துகள் ‘வக்ஃப் சொத்துகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
வக்ப் வாரியம் & வக்ப் சட்டம்:-
வக்ப் சொத்துகளை பராமரிக்க இந்தியாவில் வக்ஃப் சட்டம் 1923-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது.
அதன்பின்பு 1954-ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இயற்றிய 1923-ஆம் ஆண்டின் வக்ஃபு சட்டத்தை நீக்கி விட்டு, 1954-ஆம் ஆண்டி புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டது.
இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃபு சொத்துக்களை நிர்வகிக்க தமிழ்நாடு வக்பு வாரியம் போன்று வக்பு வாரியங்கள் நிறுவப்பட்டது. பின்னர் 1995-ஆம் ஆண்டில் புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டு, 1954-ஆம் ஆண்டு வக்பு சட்டம் நீக்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநிலவக்ஃப் வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்ஃப் சொத்துகளை நிர்வகித்து வருகின்றன. இதன் கீழ் மாவட்ட வக்ஃப் குழுக்கள் செயல்படுகின்றன.
இந்த வக்ப் வாரியம் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது.
வக்ப் வாரிய பணிகள்:-
ஒவ்வொரு வக்ஃப்பின் தோற்றம், வருமானம், பொருள் மற்றும் பயனாளிகள் தொடர்பான தகவல்களைக் கொண்ட பதிவேட்டைப் பராமரித்தல்.
வக்ஃபுகளின் வருமானம் மற்றும் பிற சொத்துக்கள் பொருள்கள் மற்றும் அத்தகைய வக்ஃப்கள் உருவாக்கப்பட்ட அல்லது நோக்கம் கொண்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
வக்ஃப் நிர்வாகத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல். ஈ) வக்ஃப்களுக்கான நிர்வாகத் திட்டத்தைத் தீர்ப்பதற்கு.
முத்தவல்லிஸ் சமர்ப்பித்த பட்ஜெட்டை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல் மற்றும் வக்ஃப்களின் கணக்குகளை தணிக்கை செய்ய ஏற்பாடு செய்தல்.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா 2024 :-
வக்ப் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வக்ஃப் சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் மக்களவையில் இதுதொடர்பான திருத்த மசோதா இன்று ஆகஸ்ட் 8 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாக்கள்.
1.வக்ஃபு நிலங்களை கட்டாயமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
2.வக்ஃபு நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்யும்.
3.வக்ஃபு நிலமாக அறிவிக்கப்படும் முன் சம்பந்தப்பட்டோருக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும்.
4.வக்ஃபு வாரியங்களில் மகளிர், பிற மதங்களை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வழிவகை.
5. 5 ஆண்டுகளாக இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர் தனது நிலத்தை வக்ஃபு வாரியத்துக்கு அளிக்கலாம்.
மத்திய வக்ஃப் கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
மத்திய வக்ஃப்கவுன்சிலில் ஒரு மத்திய அமைச்சர்,3 எம்.பி.க்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், 3 முஸ்லிம் சட்ட நிபுணர்கள், 2 முன்னாள் நீதிபதிகள் தேசிய அளவில் புகழ்பெற்றவர்கள், மூத்த மத்தியஅரசு ஊழியர்கள் 4 பேர் இடம்பெறுவர்.