மீமிசல் கடைவீதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் மற்றும் மீமிசல் காவல் துறையின் முக்கிய அறிவிப்பு.
மீமிசல்,மே,26-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் கடைவீதியில் வணிகம் செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் மற்றும் மீமிசல் காவல் துறையின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:-
மீமிசல் கடைத்தெருவில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஒழுங்கற்றண்ட முறையில் நிறுத்துவதால் அடிக்கடி அதிக வாகன விபத்துகள் ஏற்படுகின்றது.
இதனை தடுக்கும் விதமாகவும், முறையாக வாகனங்களை நிறுத்துவதற்கும் கடைவீதியில் சாலையின் இருபுறமும் மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் கயிறு அடிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை கயிற்றுக்கு உள்ளே நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு ஒத்துழைப்பு அளித்த மீமிசல் காவல் நிலைய ஆய்வாளர், துனை ஆய்வாளர், காவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், மீமிசல் கவுன்சிலர், மீமிசல் வர்த்தக சங்க கௌரவ தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
தலைவர்,
ஐக்கிய வர்த்தக சங்கம், மீமிசல்.
இது தொடர்பாக மீமிசல் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:-
மீமிசல் கடைவீதி வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு வெளியே அடிக்கபட்டுள்ள கயிறுக்கு உள்ளே உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும், அதை கடை உரிமையாளர்கள் சரிசெய்து கொள்ள வேண்டும். மேலும் கயிற்றுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனத்திற்கு முதல் முறை ஆயிரம் ரூபாய் அபராதமும் மறுமுறை அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது. எனவே அனைத்து கடை உரிமையாளர்களும் மற்றும் பொதுமக்களும் இந்த அறிவிப்பினை கடை பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.