மீமிசலில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது.
மீமிசல்,ஜூலை.16-
மீமிசலில் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று 16.07.24 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
முதல் அமைச்சரின் முகவரித்துறை சார்பில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் ஜூலை 11-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் கொப்பளத்தில் உள்ள மீமிசல் ஊராட்சி மன்ற பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம் காலை 10.00 முதல் 3.00 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வை தொடங்கி வைப்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ் அவர்களும், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் ஐ.ஏ.எஸ் அவர்களும், மேலும் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்,
வழங்கப்படும் சேவைகள்
எனவே மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.