மீனவா் நலத்திட்ட அலுவலா் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

மீமிசல், பாலக்குடி, கீழக்குடியிருப்பு, ஆகிய 3 மீனவ கிராமங்களில் சாகா் மித்ரா (மீனவா் நலத்திட்ட அலுவலா்) பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 3 மீனவ கிராமங்களில் மீனவ மக்களிடையே அரசின் நலத் திட்டங்கள் குறித்து விளக்கி விழிப்புணா்வை ஏற்படுத்தும் சாகா் மித்ரா பதவிகளுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 32 மீனவ கிராமங்களில், கீழக்குடியிருப்பு, மீமிசல், பாலக்குடி ஆகிய 3 மீனவ கிராமங்களில் மட்டும் இதுவரை சாகா் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

மீனவ கிராமப் பகுதியைச் சோ்ந்த 35 வயதுக்குள்பட்ட, குறைந்தது பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற நபா்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு தகுதியுள்ள நபா்கள் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை வரும் அக். 7-ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button