மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதி.
மீமிசல், அக்,19:
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீனவர்கள் யாரும் கடலில் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோபாலப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல், தங்கள் படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர்.
தற்போதைய நிலைமையில் இயல்பு திரும்பியுள்ளதால், மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Chennai வானிலை மையத்தின் கணிப்பின் படி, தற்போது கடல் சூழ்நிலை மீன்பிடிக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
இதையடுத்து, கோபாலப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு புறப்படுகிறார்கள்.