மாவட்டத்தில் பரவலாக மழை: 7 வீடுகள் சேதம்; ஒரு மாடு உயிரிழப்பு.
புதுக்கோட்டை, அக்.16 –
மாவட்டத்தில் பரவலாக மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் 7 வீடுகள் சேதமடைந்ததுடன், ஒரு மாடு உயிரிழந்தது.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருந்தபோதும், அவ்வப்போது லேசான மழை தூறி, மாலை 6 மணியிலிருந்து பரவலாக மழை பெய்தது.
மழையின் தாக்கம்:
நேற்று காலை 6:30 மணி வரை பதிவான 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
- பெருங்களூர்: 4,
- புதுக்கோட்டை: 8.50,
- கந்தர்வகோட்டை: 13.60,
- கறம்பக்குடி: 1.20,
- கீழணை: 13.40,
- திருமயம்: 20.40,
- அரிமளம்: 26.20,
- அறந்தாங்கி: 8.40,
- ஆயிங்குடி: 7.20,
- நாகுடி: 8.40,
- மீமிசல்: 16.80,
- ஆவுடையார்கோவில்: 6.20,
- மணமேல்குடி: 7.50,
- இலுப்பூர்: 6.20,
- குடுமியான்மலை: 134,
- அன்னவாசல்: 2,
- விராலிமலை: 8,
- உடையாளிப்பட்டி: 10.20,
- கீரனூர்: 3,
- பொன்னமராவதி: 51,
- காரையூர்: 20.
மழையால் 2 குடிசை வீடுகளும் 5 ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன. மேலும், ஒரு மாடு உயிரிழந்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1