மார்ச் 31 ஞாயிறு அன்று வங்கிகள் அனைத்தும் இயங்கும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
மார்ச் 31 ஞாயிறு அன்று பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் இயங்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நடப்பாண்டின் வருமான வரி உள்ளிட்ட பிற வரி செலுத்தும் விசயங்களுக்கா இம்மாதம், 31-ம் தேதி வங்கிகள் இயக்கும்’ என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
வழக்கமாக, ஞாயிறு அன்று பொது விடுமுறை. ஆனால், இந்த முறை வருமனா வரி துறை தொடர்பான பணிகள் முடிக்க வேண்டியுள்ளதால் மார்ச்-31 வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ஆர்.பி.ஐ. வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு சார்ந்த அலுவல் பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் பொதுத் துறை வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இதன்படி,பொதுத் துறை வங்கிகள், பேங்க் ஆஃப் பரோடா,ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் உள்ளிட்ட வங்கிகள் ஞாயிறுயன்று செயல்படும்.