மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்.
“அம்மா, என்னை மன்னியுங்கள். மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் உடைந்துவிட்டது. இனியும் சண்டையிட எனக்கு வலிமை இல்லை” என்று கூறி மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்
வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு முன்னேறிய போது வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் உடனடியாக டுவிட் செய்கிறார். அது ஏன்? என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் ஆதங்கம்.
வினேஷ் போகத் மேல்முறையீடு – இன்று தீர்ப்பு.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மேல் முறையீடு செய்த நிலையில், சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கவிருந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார் வினேஷ் போகத்.