மதரஸா பள்ளிகள் சட்டம் இந்திய மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக உள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
உத்தர பிரதேசத்தில் மதரஸா பள்ளிகள் சட்டம் செல்லாது மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
உத்திர பிரதேசத்தின் ‘மதரஸா பள்ளிகள் சட்டம்-2004’ செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
மதரஸா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை தொடக்கக் கல்வி வாரியத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
உபியை சேர்ந்த வழக்கறிஞர் அன்சுமன் சிங் ரத்தோர் என்பவர் மதரஸாக்கள் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் அரசியலமைப்பின் 21-ஏ பிரிவின் கீழ் தேவைப்படும் 14 வயது/8 ஆம் வகுப்பு வரை தரமான கட்டாயக் கல்வி மற்றும் மதரசாக்களில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தேவைக்கேற்ப உலகளாவிய மற்றும் தரமான பள்ளிக் கல்வியை வழங்க மதரஸா சட்டம் தவறிவிட்டது என அதில் குறிப்பிட்டு இருந்தார் இந்த வழக்கை நீதிபதிகள் விவேக் சவுத்ரி, சுபாஷ் வித்யார்த்தி விசாரித்தனர் விசாரனை முடிவில்
உத்தர பிரதேச மதரஸாகல்விச் சட்டம் 2004 அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இந்தசட்டம் மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்’’ என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 16,513 அங்கீகரிக்கப்பட்ட மதரசாக்கள் உள்ளன ,மதரசா தரப்பினர் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்தனர்.