மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உத்தரப் பிரதேசத்தின் மதரஸா பள்ளிகள் சட்டத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2004-ல் சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிராக இருப்பதாக கூறி மதரஸா சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் சட்டத்தை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2004-ல் சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட மதரஸா கல்வி வாரிய சட்டத்தின் மூலம் அங்குள்ள 16,000 மதரஸாக்களில் 17 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர்.

இந்நிலையில் உ.பி மதரஸா கல்வி வாரிய சட்டம், மதசார்பின்மை விதிமுறைகளை மீறுவதால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி உபியை சேர்ந்த வழக்கறிஞர் அன்சுமன் சிங் ரத்தோர் என்பவர்  அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனுவில் அரசியலமைப்பின் 21-ஏ பிரிவின் கீழ் தேவைப்படும் 14 வயது/8 ஆம் வகுப்பு வரை தரமான கட்டாயக் கல்வி மற்றும் மதரசாக்களில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தேவைக்கேற்ப உலகளாவிய மற்றும் தரமான பள்ளிக் கல்வியை வழங்க மதரஸா சட்டம் தவறிவிட்டது என அதில் குறிப்பிட்டு இருந்தார் இந்த வழக்கை நீதிபதிகள் விவேக் சவுத்ரி, சுபாஷ் வித்யார்த்தி விசாரித்தனர் விசாரனை முடிவில்

உத்தர பிரதேச மதரஸாகல்விச் சட்டம் 2004 அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இந்தசட்டம் மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் அச்சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

அதனை எதிர்த்து மதரஸா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் உத்தரப்பிரதேச அரசு 2004-ல் கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும். மதரஸா சட்டத்தை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் மாநில பாஜக அரசுக்கும். ஒன்றிய பாஜக அரசுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button