மதரஸாக்கள் முழுவதையும் மூட தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை.
மதரஸாக்கள் முழுவதையும் மூட தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மதரஸாக்கள் முழுவதையும் மூட தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை
மதரஸாக்கள் தொடர்பாக நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவற்றை மூடுவதற்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் (NCPCR) பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையில், மதரஸா கல்வியின் தரம் பிற பொதுப் பள்ளிகளோடு ஒப்பிடும்போது குறைவாக இருப்பதாகவும், அதனால் அனைத்து மதரஸாக்களும் மூடப்படவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
அந்த அறிக்கையில், மதரஸாக்களுக்கு அரசு நிதி நிறுத்தப்படவேண்டும் என்றும், முஸ்லீம் அல்லாத மாணவர்கள் மதரஸாக்களில் சேர்க்கப்படக்கூடாது என்றும், முஸ்லீம் மாணவர்களும் பொதுப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டவை, மேலும், முஸ்லீம் சமூக குழந்தைகளின் கல்வி நிலைகளை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு NCPCR தலைவர் பிரியங்க் கனூங்கோ எழுதிய கடிதத்தில், தற்போது ஆர்டிஇ சட்டத்தின்படி, அந்த அறிக்கையில், மதரஸாக்களுக்கு அரசு நிதி நிறுத்தப்படவேண்டும் என்றும், முஸ்லீம் அல்லாத மாணவர்கள் மதரஸாக்களில் சேர்க்கப்படக்கூடாது என்றும், முஸ்லீம் மாணவர்களும் பொதுப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் அல்லாத குழந்தைகளை மதரஸாக்களில் இருந்து நீக்கி, முறையான பள்ளிகளில் சேர்க்கவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
NCPCR recommends end to funding for Madrasas, calls for their closure.