மதரஸாக்களை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் தடை
மதரஸாக்களை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் தடை.
மதரஸாக்களை மூட வேண்டும், மதரஸாக்களுக்கு நிதி வழங்குவது நிறுத்த வேண்டும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்ததற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், மதரஸா பள்ளிகளை மூட வேண்டும் என்றும், மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியது.
இந்த பரிந்துரைக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், “எங்கள் நோக்கம் மதரஸாக்களை மூடுவது அல்ல, ஆனால் ஏழை முஸ்லீம் குழந்தைகள் அடிப்படை கல்வி பெற வேண்டும் என்பதே” என ஆணையத் தலைவர் பிரியங்க கனூங்கோ தெரிவித்தார்.
இதற்கு பின், உத்தரபிரதேசம் மற்றும் திரிபுரா போன்ற பாஜக ஆட்சி பகுதிகளில் மதரஸா பள்ளி மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மதரஸாக்களை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பரிந்துரைக்கு உச்சநீதிமன்றம் தடை
வழக்கு விசாரணையின் போது, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களை மூடுவதற்கு மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆணையத்தின் பரிந்துரைகளை நிறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி தலைமை நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.