மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்.
மணமேல்குடி,ஏப்ரல்.23-
மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி மற்றும் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஆண்டுவிழா நிதி வரவினம் சரிபார்த்தல், மடிக்கணினியை முறையே பயன்படுத்துதல், இணையத்தளம் குறித்த உடனுக்குடன் தகவல் பதிவு செய்தல், தேசிய திறனாய்வு தேர்விற்கு இனி வருங்காலங்களில் தொடர்முயற்சி மேற்கொள்ளல் வேண்டும் என்றும்,
ஹைடெக் லேப் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் பதிவு செய்தல் செய்து முடித்தமை அறிக்கை தருதல் வேண்டும் என்றும் தேர்ச்சி விவரம் மற்றும் மக்கள் தொகைக் கணக்கு விவரம் தொகுத்து மே – 10ம். தேதிக்குள் அனுப்புதல் வேண்டும் என்றும், இணைய இணைப்பு சார்ந்த படிவம் நிரப்பி உடன் வழங்கிடல் வேண்டும் என்றும், வட்டாரக்கல்வி அலுவலர் 2 அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் அனைத்து தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், பள்ளிமானியம் மீதமுள்ள 50% Non – SNA கணக்கில் வரவு வைக்க ஏதுவாக வங்கிக் கணக்கு விபரம் உடன் வழங்கல் சார்ந்த தகவல்களை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அங்கையர்கண்ணி வேல்சாமி மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்