மணமேல்குடி ஒன்றியத்தில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களுக்கான தேர்வு கூட்டம்.
மணமேல்குடி,ஆகஸ்ட்.10
மணமேல்குடி ஒன்றியத்தில் 50 சதவீத 26 தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களுக்கான தேர்வு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 சதவீத 26 தொடக்கப்பள்ளிகள் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களுக்கான தேர்வு இன்று நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று தேர்வு செய்தனர். இக்குழுவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் என 24 உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.
இக்குழுவானது அடுத்த இரண்டு வருடங்களுக்கு பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கட்டமைப்புகளையும், கற்றல் கற்பித்தலில் சிறப்பான மாற்றங்களை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.மேலும் நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் காரக்கோட்டை, பட்டங்காடு, வடக்கூர், பொன்னகரம், அம்பலவாணநேந்தல் ஆகிய பள்ளிகளை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் அமுதா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் பார்வையிட்டு உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் அனைத்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எஸ்.ம்.சி கருத்தாளர் சுந்தர பாண்டியன் வானவில் மன்ற கருத்தாளர்கள் சண்முகப்பிரியா ஜெனிட்டா ஆகியோர் பார்வையாளர்களாக செயல்பட்டனர்.