மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 3 இடங்களில் இன்று நடக்கிறது.
புதுக்கோட்டை, ஆக.30-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வளவம்பட்டி, கல்புடையான்பட்டி, சோச்சிப்பாளை, கல்லுக்காரன்பட்டி, வன்னாரப்பட்டி, கணபதிபுரம், தொண்டைமான்பேரணி ஆகிய ஊராட்சிகளுக்கு, ஆதனக்கோட்டை ஸ்ரீ லெட்சுமி திருமண மஹாலிலும்,
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி, மங்களாகோவில் சமுதாயக் கூடத்திலும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர், குரு ராகவேந்திரா திருமண மண்டபத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது.
மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1