மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள் விவரம்.
புதுக்கோட்டை, ஆக.8-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், நெற்குப்பை, அம்பளவாநேந்தல் யோகம் திருமண மஹாலில், மணலூர், மின்னாமொழி, நெற்குப்பை, நெல்வேலி, கோலேந்திரம், பெருமருதூர், கானாடு, கீழமஞ்சக்குடி, சட்டியடி, செய்யாணம், வேலூர் ஆகிய ஊராட்சிகளுக்கும்,
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் அம்பாள் திருமண மண்டபத்தில், கொத்தகோட்டை, கோவிலூர், திருக்கட்டளை, திருவரங்குளம், வேப்பன்குடி ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது.
இதேபோல விராலிமலை ஊராட்சி ஒன்றியம், கொடும்பாளூர், நந்தி கோவில் அருகில் உள்ள மைதானத்தில், கொடும்பாளூர், தென்னத்திரையான்பட்டி, கசவனூர், அகரப்பட்டி, மீனவேலி, பொய்யாமணி, தேராவூர் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது.
மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.