மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
புதுக்கோட்டை, ஆக.1-
புதுக்கோட்டை மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் முகாம் நாளை 02.08.24 (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், கட்டுமாவடி பி.எம்.எஸ். திருமண மண்டபத்தில், பிராமணவயல், இடையாத்திமங்கலம், இடையாத்தூர், காரக்கோட்டை, கட்டுமாவடி, நிலையூர், தண்டலை, கிருஷ்ப்ணாஜிபட்டினம், திணையக்குடி ஆகிய ஊராட்சிகளுக்கும்,
அரிமளம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குடி கைலாசபுரம் சமுதாய கூடத்தில், கே.செட்டிப்பட்டி, கடியாப்பட்டி, ஆயிங்குடி, கண்ணன்காரக்குடி, மேலநிலைவயல், நெடுங்குடி, நல் லம்பால் சமுத்திரம், கே.ராயபுரம், கல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெறஉள்ளது.
இதேபோல அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், கிளிக்குடி சமுதாய கூடத்தில், பரம்பூர், கதவம்பட்டி, தளிஞ்சி, குடுமியான்மலை, கிளிக்குடி, புல்வயல் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது.
மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.