மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு.

புதுக்கோட்டை, ஜூலை. 25-

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கான மக்களுடன் முதல்வர் முகாம் கோட்டைப்பட்டினம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும், இதில் கரகத்திகோட்டை, வெட்டிவயல், மஞ்சக்குடி, கோட்டைப்பட்டினம் ஆகிய ஊர்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்ளலாம்,

அதேபோல திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சி, கே.கே.திருமண மண்டபத்தில் இசுகுபட்டி, எஸ்.குள வாய்ப்பட்டி, கத்தகுறிச்சி, களங்குடி, கைக்குறிச்சி, சென்டாகுடி, பழையூர், பூவரசக்குடி, மணியம்பலம், வல்லத்திராக்கோட்டை, வாண்டாக்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற உள்ளது.

குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், அண்டக்குளம் ஊராட்சி, நூர் மண்டபத்தில், அண்டக்குளம், பெரியதம்பியுடையான்பட்டி, கிள்ளனூர், முட்டம்பட்டி, வைத்தூர், வத்தனாக்குறிச்சி, செனையக்குடி, வீரக்குடி, வாழமங்களம், தேனான்குடி ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது.

மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button