பொன்னமராவதியில் `பெட்டிசன் மேளா’.
பொன்னமராவதி, மார்ச்.21-
பொன்னமராவதியில் உள்ள திருமண மண்டபத்தில் பெட்டிசன் மேளா என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளித்த மனுக்கள் விசாரணை நடைபெற்றது. பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமை தாங்கினார். பெட்டிசன் மேளா என்ற பெயரில் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்களை அழைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை செய்த–ார். மேலும் குற்ற தடுப்பிற்கான 6383071800, 9384501999, எண்கள் குறித்தும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது போன்ற வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறித்த விழிப்புணர்வையும் எடுத்து கூறினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1